லாக்டவுன் எதிரொலி… ரூ.249 கோடி நஷ்டத்தை சந்தித்த மாருதி சுசுகி

 

லாக்டவுன் எதிரொலி… ரூ.249 கோடி நஷ்டத்தை சந்தித்த மாருதி சுசுகி

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.249.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் லாபமாக ரூ.1,435.5 கோடி ஈட்டியிருந்தது.

லாக்டவுன் எதிரொலி… ரூ.249 கோடி நஷ்டத்தை சந்தித்த மாருதி சுசுகி

செயல்பாட்டு இழப்பு மற்றும் விற்பனை பெரிய அளவில் சரிவு கண்டதால் வருவாய் குறைந்தது போன்ற காரணங்களால் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,106.5 கோடியாக சரிவடைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 79.2 சதவீதம் குறைவாகும்.

லாக்டவுன் எதிரொலி… ரூ.249 கோடி நஷ்டத்தை சந்தித்த மாருதி சுசுகி

2020 ஜூன் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 76,599 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 81 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் மொத்தம் 4.02 லட்சம் கார்களை மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. கடந்த காலாண்டில் மாருதி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி முறையே 82 மற்றும் 66 சதவீதம் குறைந்துள்ளது.