கடந்த மே மாதத்தில் வெறும் 3,714 கார்களை மட்டுமே தயாரித்த மாருதி சுசுகி இந்தியா….

கடந்த மே மாதத்தில் வெறும் 3,714 கார்களை மட்டுமே தயாரித்த மாருதி சுசுகி இந்தியா….

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா கடந்த மாதத்தில் கார் உற்பத்தியை 98 சதவீதம் குறைத்ததாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மாருதி சுசுகி இந்தியா, கடந்த மே மாதத்தில் கார் தயாரிப்பை 97.54 சதவீதம் குறைத்து 3,714 கார்களை மட்டுமே தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் வெறும் 3,714 கார்களை மட்டுமே தயாரித்த மாருதி சுசுகி இந்தியா….

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2019 மே மாதத்தில் மொத்தம் 1.51 லட்சம் கார்களை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. அது முதல் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஆலைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த மே மாத தொடக்கத்தில் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது. வாகன தயாரிப்பு ஆலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த மே மாதத்தில் வெறும் 3,714 கார்களை மட்டுமே தயாரித்த மாருதி சுசுகி இந்தியா….

இதனையடுத்து வாகன தயாரிப்பு ஆலைகளை நிறுவனங்கள் திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகன தயாரிப்பு ஆலைகளை படிப்படியாக திறந்தது. கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் ஆலைகளை இயக்கிய மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் கார் தயாரிப்பை கணிசமாக குறைத்துள்ளது. கடந்த மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா விற்பனையும் கடும் சரிவை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.