மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

 

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

பொருளாதார மந்தநிலை,பணப்புழக்கம் குறைந்தது போன்ற காரணங்களால் கடந்த ஆண்டில் வாகன விற்பனை படுமந்தமாக இருந்தது. சரி 2020ம் ஆண்டாவது வாகன விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாகன தயாரிப்பாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு வில்லன் கொரோனா வைரஸ் மற்றும் அதனால் அமல்படுத்த லாக்டவுன் ரூபத்தில் வந்தது.

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

முழு லாக்டவுன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை சுத்தமாக நடைபெறவில்லை. கடந்த மே மாதத்தில் லாக்டவுன் சிறிது தளர்த்தப்பட்டதால் வாகன விற்பனை பெயரளவுக்கு நடைபெற்றது. மே மாதத்தை காட்டிலும் ஜூனில் வாகன விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாத வாகன விற்பனையை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. நம் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 1.08 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டால் விற்பனை கடந்த மாதத்தில் விற்பனை 1.1 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டால் விற்பைன அதிகரித்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 57,428 கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் சென்ற மாதத்தில் மொத்தம் 5,386 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 48.32 சதவீதம் குறைவாகும். 2019 ஜூலை மாதத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 10,423 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அந்நிறுவனம் உள்நாட்டில் 3,866 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.