3 மாதத்தில் 3.53 லட்சம் கார்கள் விற்பனை.. மாருதி சுசுகி நிகர லாபம் ரூ.441 கோடி

3 மாதத்தில் 3.53 லட்சம் கார்கள் விற்பனை.. மாருதி சுசுகி நிகர லாபம் ரூ.441 கோடி

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.440.8 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.440.8 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.249.4 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

3 மாதத்தில் 3.53 லட்சம் கார்கள் விற்பனை.. மாருதி சுசுகி நிகர லாபம் ரூ.441 கோடி
மாருதி சுசுகி இந்தியா கார்

2021 ஜூன் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.17,770.7 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 4 மடங்குக்கும் அதிகமாகும். அந்த காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வருவாயாக ரூ.4,106.5 கோடி ஈட்டியிருந்தது.

3 மாதத்தில் 3.53 லட்சம் கார்கள் விற்பனை.. மாருதி சுசுகி நிகர லாபம் ரூ.441 கோடி
மாருதி சுசுகி இந்தியா

கடந்த ஜூன் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 3.53 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது மாருதி சுசுகி இந்திய நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.21 சதவீதம் குறைந்து ரூ.6,991.90ஆக இருந்தது.