மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

 

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருக்கும் கூகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்கியதில், மதுரையை சேர்ந்த வீரர் பாலுச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டு, சாலை மார்க்கமாக பொய்கைக்கரைப்பட்டிக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது கூடுதல் வேதனையளிக்கிறது. பாலுச்சாமியின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரர் பாலுச்சாமியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் மதுரை-பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர் திரு.பாலுச்சாமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

வீரமரணம் எய்திய திரு.பாலுச்சாமி அவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.