Home இந்தியா திருமணத்தை மீறிய உறவில் இந்திய பெண்களே அதிகம்! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!!

திருமணத்தை மீறிய உறவில் இந்திய பெண்களே அதிகம்! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!!

இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு தெரியாமல் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவது க்ளீடன் என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Married women are accepting extra-marital relationships as a way out | Image credit: Reuters (Representational)

‘காதல்’- 16 வயதான இளம்பருவத்தில் முளைப்பது என்பது அனைவரும் கூறுவதுண்டு. ஆனால் காதலுக்கு வயது வித்தியாசமெல்லாம் இல்லை. எந்த நேரத்திலும் எந்த சமயத்திலும் காரணமே இல்லாமல் எதிர் பாலினத்தாரின் மீது காதல் வயப்படுவது மனித இயல்புதான். ஆணோ, பெண்ணோ திருமணத்திற்கு முன்பு வரை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். யாருடன் வேண்டுமானாலும் காதல், நட்பு, இல்லை அதனையும் மீறி கூட பேசலாம். ஆனால் திருமணம் என்பது இளசுகளின் கை, கால்களை கட்டிப்போடும் ஒரு சடங்கு என்றே சொல்கின்றனர். ஆனால் உண்மையில் திருமணத்திற்கு பின்னரே நிறைய தவறுகளும், தடம்புரண்டல்களும் இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

Extramarital affairs make some couples happier, says a study | The Times of  India

ஒழுக்கம், நடத்தை என பேசிய காலமெல்லாம் மறைந்துவிட்டது. திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களில் சுமார் 48 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களில் தாய்மார்களும் இருக்கின்றனர். திருமணத்தை மீறிய உறவுகள் தொடர்பாக க்ளீடன் என்ற இணையதள நிறுவனம் நடத்திய ஆய்வில் 30 முதல் 60 வயதுடைய பெண்கள் பங்கேற்றனர். இவர்களில் 78 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள், 74 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஆண் மீது பெண்களுக்கு ஏற்படும் மோகத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கணாவரின் மீதான அதிருப்தி, மனம் விரும்பாத ஒரு வாழ்க்கை துணை உள்ளிட்டவையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனக்கு ஏற்ற அழகு தன் துணை இல்லை என்ற எண்ணமும், தன்னுடனான பாலியல் உறவை திருப்தி படுத்தாததும், கணவர்களை வெறுக்க பெண்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இதுபோன்று பல்வேறு காரணங்களை சொல்லி திருமணத்தை மீறிய உறவை நியாயப்படுத்துகின்றனர் இந்திய பெண்கள்.

2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி, இந்தியாவில் திருமணமானவர்களில் கிட்டத்தட்ட 56 சதவீதம் பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். 25 மற்றும் 50 வயதிற்குட்பட்ட 1,525 திருமணமான இந்தியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 48 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் காதலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

What We Don't Often Hear About Extramarital Affair | by Arjun Som | Medium

வேலைக்காக வெளியில் செல்லும் திருமணமான பெண்கள், அங்கு சிலர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உறவு வைத்திருப்பதுண்டு. அந்த உறவு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கிடைக்கலாம். அதேபோல் டிக்டாக் போன்ற செயலி, சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் ஆண்களிடம் சிக்கும் குடும்ப பெண்கள், தங்களை அறியாமலேயே ஆண்கள் சொல்லும் சொற்ப காரணங்களுக்காக கணவரை விட்டு முன்பின் தெரியாத ஆண்களின் பின்னால் செல்வதுண்டு. சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் போன்றவற்றையெல்லாம் கூட மறந்து மற்றொரு ஆணை தேடி போவது அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவே உள்ளது. இதெல்லாம் மெளனமாக ஆண்களுக்கு பெண்கள் செய்யும் துரோகம் என சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை. ஆண்களோ, பெண்களோ தங்களது துணைக்கு பாலியல் உறவில் பூர்த்தி செய்தல் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்தல், விட்டுக்கொடுத்தல், குறையாத காதல் போன்றவையே வேறு ஒரு உறவை தேடி செல்லாததற்கு வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews