திருமண மண்டபங்களில் 50% பேரை அனுமதிக்க வேண்டும் – திருமண மண்டப உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

திருமண மண்டபங்களில் 50% பேரை அனுமதிக்க வேண்டும் –  திருமண மண்டப உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில் மாவட்டந்தோறும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் 50% பேரை அனுமதிக்க வேண்டும் –  திருமண மண்டப உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

இந்நிலையில் தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் முறையை மாற்றி 50 சதவீதமாக அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமண மண்டபங்களில் 50% பேரை அனுமதிக்க வேண்டும் –  திருமண மண்டப உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

50 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை உருவாகியுள்ளதால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே திருமணங்களை எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர். சிலரோ வீடியோ காலில் கூட திருமணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.