கேல் ரத்னா விருது வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

 

கேல் ரத்னா விருது வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு துறை சார்ந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பரிந்துரைக் குழு இன்று வழங்கியுள்ள பரிந்துரை பட்டியலில், கடந்த 2016ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

கேல் ரத்னா விருது வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

இந்நிலையில் மாரியப்பன் தங்கவேலுவுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது உள்ளிட்ட உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. மாரியப்பன் தங்க வேலுவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கேல் ரத்னா விருதை வென்ற நம் மண்ணின் மைந்தர் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.