Home லைப்ஸ்டைல் அழகு குறிப்புகள் தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!

`மதுர மரிக்கொழுந்து வாசம் – என் ராசாத்தி உன்னுடைய நேசம்…’ இளையராஜா இசையில் உருவான இந்தப் பாடல் சில ஆண்டுகளுக்குமுன் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். அடுத்துவந்த நாட்களில், சின்னப்பொண்ணு குரலில் வெளிவந்த `மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே…. மாமன் மவ பிடிக்கலையா சொல்லு சொல்லு’ என்ற பாடலும் எல்லோரையும் கட்டிப்போட்டது. மரிக்கொழுந்தை முன்னிறுத்தி இந்தப் பாடல்கள் பாடப்பட்டன. அந்த மரிக்கொழுந்து மணம் வீசும் என்பது மட்டுமே தெரியும்; அதற்குள்ள மருத்துவக் குணம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. இதோ… இந்தக் கட்டுரையில் மரிக்கொழுந்தின் மகத்துவம் பற்றி மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரன் சொல்வதைக் கேட்போம்.

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!
தவனம்:
மரிக்கொழுந்தை மருக்கொழுந்து என்றும் சொல்லலாம். `மரு – தவனம்’ என்று கேட்டால் தமிழகத்தில் உள்ள பூக்கடைகளில் கிடைக்கும். நறுமணம் வீசும் இந்த மரிக்கொழுந்து இலைகளுக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. மெல்லிய நறுமணம் வீசும் இந்த மரிக்கொழுந்து இலைகள் மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தைக் கொடுக்கும். மரிக்கொழுந்து இலைகளை சில தைலங்களுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்குக் குளிப்பதால் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படிக் குளிப்பதால் உடல் வலி, அசதி நீங்கும். சீனர்கள் மரிக்கொழுந்து இலைகளைக் கசாயம் செய்து குடிப்பார்கள்.
இவற்றின் அடிப்படையில் அமெரிக்காவில் மரிக்கொழுந்து இலைகளில் என்ன மருத்துவக்குணம் இருக்கிறது என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதைக் கண்டறிந்தனர். மரிக்கொழுந்தின் இலை மற்றும் பூக்களில் மட்டுமே மருத்துவக் குணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!
தோல் நோய்:
மரிக்கொழுந்து வயிற்றுவலி, தோல் அரிப்பு, தடிப்பு போன்றவற்றைச் சரி செய்யும். அதற்கான மருந்தை மிக எளிதாக நாமே செய்யலாம். மரிக்கொழுந்து இலையை மையாக அரைத்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 100 மில்லி நீர் விட்டு சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய தெளிந்த நீரை குடித்தால் வயிற்றுவலி உடனே சரியாகும்.
தோல் நோய் பிரச்சினை இருப்பவர்கள் இதை தினமும் குடிப்பதுடன் பிரச்சினை உள்ள இடங்களில் அரைத்துப் பூசி வந்தாலும் குணமாகும். சொரியாசிஸ் எனப்படும் ஆபத்தான தோல் நோய்கூட குணமாகும். சிறுநீர் கழிக்கும்போது வலி எடுப்பது, வயிற்றுக்கடுப்பு நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது.

மூட்டு வலி:
மூட்டு வலி உள்ளவர்கள் இதை அரைத்து மேல்பூச்சாக பற்று போடலாம். வீக்கம், வலிகளைப் போக்கவும் இதை பற்று போடலாம். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தலையணையின் அடியில் மரிக்கொழுந்து இலைகளை வைத்துத் தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும்.

தோல் நோய்களைக் குணப்படுத்தும் மரிக்கொழுந்து!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

“விஜய் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு” – மகனை எதிர்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி...

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...
TopTamilNews