பாராசூட் பிராண்ட் எண்ணெய் நிறுவனமான மரிகோவின் லாபம் 23 சதவீதம் வளர்ச்சி….

பாராசூட் பிராண்ட் எண்ணெய் நிறுவனமான மரிகோவின் லாபம் 23 சதவீதம் வளர்ச்சி….

நாட்டின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது மரிகோ. பாராசூட், நிகார் உள்ளிட்ட பிராண்ட் தயாரிப்புகள் மரிகோ நிறுவனத்தின் உடையதுதான். அந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் மரிகோ நிறுவனத்தின் லாபம் நிபுணர்களின் மதிப்பீட்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.

பாராசூட் பிராண்ட் எண்ணெய் நிறுவனமான மரிகோவின் லாபம் 23 சதவீதம் வளர்ச்சி….

மரிகோ நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.388 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.2 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் மரிகோ நிறுவனம் லாபமாக ரூ.315 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. இந்நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு முக்கிய காரணம் விதிவிலக்கு ஆதாயம் கிடைத்ததுதான்.

பாராசூட் பிராண்ட் எண்ணெய் நிறுவனமான மரிகோவின் லாபம் 23 சதவீதம் வளர்ச்சி….

2020 ஜூன் காலாண்டில் மரிகோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் 11.1 சதவீதம் சரிந்து ரூ.1,925 கோடியாக குறைந்துள்ளது. லாக்டவுனால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் இந்திய வர்த்தக வருவாய் 14.5 சதவீதம் குறைந்து ரூ.1,480 கோடியாகவும், சர்வதேச வர்த்தக வருவாய் 2.3 சதவீதம் உயர்ந்து ரூ.445 கோடியாகவும் உள்ளது.