சுதந்திர தினத்தையொட்டி ஈரோட்டில் மாரத்தான் போட்டி… ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்!

சுதந்திர தினத்தையொட்டி ஈரோட்டில் மாரத்தான் போட்டி… ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்!

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மராத்தான் ஓட்ட பந்தயத்தை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, ஈரோடு வ.உ.சி பூங்காவில் நேற்று வலிமையான இந்தியாவிற்கான சுந்தந்திர ஓட்டம் என்ற பெயரில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, மராத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் வரவேற்றார்.

சுதந்திர தினத்தையொட்டி ஈரோட்டில் மாரத்தான் போட்டி… ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்!

இந்த மாரத்தான் ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஈரோடுடு வ.உ.சி. பூங்காவை தொடங்கிய மாராத்தான் ஓட்டம் ஸ்வஸ்திக் கார்னர், சத்தி ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று மீண்டும் வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது. முன்னதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.