மாரடோனா இறுதி ஊர்வலம் – இருபுறமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

மாரடோனா இறுதி ஊர்வலம் – இருபுறமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

கால்பந்தின் கடவுள் எனப் போற்றப்படுபவர் மாரடோனா. அவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று முதன் நாள் இரவு இறந்தார். இந்த அதிர்ச்சியை ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

21 ஆண்டுகள் மாரடோனா கால்பந்து விளையாட்டை தொழில்முறையா ஆடியவர். 491 போட்டிகளில் ஆடிய இவர், 295 கோல்களை அடித்தவர். 1986 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா உலக கோப்பையை வெல்ல முக்கியக் காரணம் அப்போது கேப்டான இருந்து அணியை திறமையாக வழி நடத்திய மாரடோனாதான்.

மாரடோனா இறுதி ஊர்வலம் – இருபுறமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

1990 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா அணிதான் உலக கோப்பையை வெல்லும் என பலரையும் நம்ப வைத்ததும், இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்றதும் மாரடோனாதான். ஆனால், அம்முறை கோப்பையை வெல்ல முடியவில்லை. பிஃபா அமைப்பு 2000 ஆம் ஆண்டு நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் நடத்திய வாக்கெடுப்பில் 53.6 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அதாவது வாக்களித்ததில் பாதிக்கும் மேற்பட்டோரின் சாய்ஸ் இவரே.

அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் மாரடோனாவின் உடல் தேசிய கொடி போர்த்தப்பட்டு ரசிகர்களின் அஞ்சலிக்காக வைத்திருக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மாரடோனா இறுதி ஊர்வலம் – இருபுறமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

இறுதி ஊர்வலத்தின்போது, இருபுறமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க மாரடோனாவுக்கு பிரியா விடை கொடுத்தனர். இப்படி ஒரு கூட்டத்தை சமீபத்தில் எவர் மரணத்தின்போது கண்டிருக்க மாட்டார்கள்.