பல பணக்கார வீட்டு பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை உருவாக்கி அதை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த ஒரு கிராபிக் டிஸைனரை போலீசார் கைது செய்தார்கள்.

டெல்லியில் வசிக்கும் 20 வயதான சோயிப் அக்தர் என்பவர் ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கிய ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார்.ஆனால் COVID-19 பூட்டுதலின் போது அவர் தனது வேலையை இழந்தார். மேலும் அவர் கிராஃபிக் டிசைனில் டிப்ளோமாவும் பெற்றிருக்கிறார் .
அவர் வேலையிழந்ததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டார் .அதனால் தனனுடைய கூட்டாளிகள் நாசிமுல் ஹக் மற்றும் ஜப்பார் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு பல பணக்கார வீட்டு பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அதை அந்த பெண்களுக்கு அனுப்பி வைத்து, அதை ஊடகத்தில் வெளியிடுவதாக அச்சறுத்தி பணம் கேட்டு மிரட்ட திட்டம் போட்டார்
அவரின் திட்டப்படி 40க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களை மார்பிங் செய்து அதை காமித்து அந்த பெண்களை மிரட்டி பணம் கேட்டார்.அவரின் மிரட்டலுக்கு பயந்து போன பெண்களில் பலர் அவரிடம் பணம் கொடுத்தார்கள் .இன்னும் சிலர் அவர் மீது பொலிஸில் துணிச்சலாக புகார் கொடுத்தார்கள் .
அதன் படி ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் , ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் அவரால் பாதிக்கப்பட்டார் .அந்த பெண்ணுக்கு அக்தர் அவரின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார் .அந்த பணத்தை தரவில்லையென்றால் அதை சமுக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார் .
அந்த பெண்னின் புகாரின் அடிப்படையில் போலீசார் அக்தரை கைது செய்து அவரின் அலுவலக்தில் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 45 க்கும் மேற்பட்ட பல பணக்கார வீட்டு பெண்களின் ஆபாச படங்கள் சிக்கியது .மேலும் அவரின் கம்யூட்டர் மற்றும் சாதனங்களை கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகிறார்கள் .
