“வென்டிலேட்டருக்கும் மோடிக்கும் இருக்கும் 3 ஒற்றுமைகள்”

 

“வென்டிலேட்டருக்கும் மோடிக்கும் இருக்கும் 3 ஒற்றுமைகள்”

கடந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ செலவுகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு சாமானியர்களும் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்களும் நிதி அளித்தனர். ஆனால் இந்த நிதியானது எப்படி செலவிடப்பட்டது, என்னென்ன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டது என எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதுகுறித்து சந்தேகம் எழவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்வியெழுப்ப தொடங்கினர்.

அவர்களின் தொடர் அழுத்தத்துக்குப் பிறகு மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வென்டிலேட்டர்களை வாங்கியது. அந்த வெண்டிலேட்டர்களை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைத்தது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட வென்டிலேட்டர்களில் 75% ஓட்ட உடைசல்களாக இருந்துள்ளன. இதனால் எதற்குமே உதவாமல் குப்பை கிடங்கில் அதனைப் போட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் புகார் எழுப்பியுள்ளனர்.

“வென்டிலேட்டருக்கும் மோடிக்கும் இருக்கும் 3 ஒற்றுமைகள்”

தற்போது இந்த விவகாரத்தின் அடிப்படையில் காமெடி பதிவு ஒன்றை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் பிரதமருக்கும் பிஎம் கேர்ஸ் மூலம் வாங்கப்பட்ட வென்டிலேட்டர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பது குறித்து கிண்டலடித்துள்ளார். அதில், “பிஎம் கேர்ஸ் வென்டிலேட்டருக்கும் பிரதமருக்கும் இடையே நிறைய விஷயங்கள் ஒத்துபோகின்றன.

மிகவும் தவறான முடிவுகளை எடுப்பது, அதற்கான வேலைகள் என்னவோ அதைச் செய்யாமல் மற்ற அனைத்தையும் செய்வது, அவற்றின் தேவைகள் இருக்கும்போது எதற்கும் உதவாமல் இருப்பது ஆகிய மூன்று ஒற்றுமைகள் பிரதமருக்கும் பிஎம் கேர்ஸ் வென்டிலேட்டர்களுக்கும் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.