கொரோனவை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் சென்னை போலீஸ்!

 

கொரோனவை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் சென்னை போலீஸ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, கடந்த 3 நாட்களாக 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு பரவி வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கிறது. சென்னையில் மட்டுமே 16,000க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனவை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் சென்னை போலீஸ்!

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல விதிமுறைகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே மாஸ்க் அணியாமல் நடந்து சென்றால் கூட அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனவை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் சென்னை போலீஸ்!
அதாவது டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.