மாதத்துக்கு 1.05 கோடி ரெம்டேசிவிர் மருந்து உற்பத்தி.. இனி பற்றாக்குறை ஏற்படாது.. மத்திய அமைச்சர் தகவல்

 

மாதத்துக்கு 1.05 கோடி ரெம்டேசிவிர் மருந்து உற்பத்தி.. இனி பற்றாக்குறை ஏற்படாது.. மத்திய அமைச்சர் தகவல்

நம் நாட்டில் தற்போது ரெட்டேசிவிர் ஊசி மருந்து உற்பத்தி திறன் 1.05 கோடியை எட்டியுள்ளது எனவே விரைவில் பற்றாக்குறை நீங்கும் என மத்திய இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஊசிமருந்து ரெம்டேசிவிர். இது உயிர் காக்கும் மருந்தல்ல. ஆனால் கொரோனா நோயாளிக்கு இந்த மருந்தை பயன்படுத்துவதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நாட்கள் குறையும். தற்போது நம் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதால் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக இருந்ததால் ரெம்டேசிவிர் ஊசிக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் கள்ள சந்தையில் பல மடங்கு அதிக விலைக்கு ரெம்டேசிவிர் மருந்தை விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பாதிக்க்பபட்டுள்ளனர்.

மாதத்துக்கு 1.05 கோடி ரெம்டேசிவிர் மருந்து உற்பத்தி.. இனி பற்றாக்குறை ஏற்படாது.. மத்திய அமைச்சர் தகவல்
மன்சுக் மாண்டவியா

இந்த சூழ்நிலையில் ரெம்டேசிவிர் ஊசி உற்பத்தி அதிகரிப்பட்டுள்ளது, விரைவில் தேவை பூர்த்தி செய்ய்பபடும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாட்டில் ரெம்டேசிவிர் ஊசி உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் மாதந்தோறும் 38 லட்சம் ரெம்டேசிவிர் ஊசி செய்யப்பட்டது. தற்போது ரெம்டேசிவிர் ஊசி மாத உற்பத்தி 1.05 கோடியை எட்டியுள்ளது. மிக விரைவில் ரெம்டேசிவிர் ஊசிக்கான வளர்ந்து தேவையை எங்களால் விரைவில் பூர்த்தி செய்ய முடியும்.

மாதத்துக்கு 1.05 கோடி ரெம்டேசிவிர் மருந்து உற்பத்தி.. இனி பற்றாக்குறை ஏற்படாது.. மத்திய அமைச்சர் தகவல்
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அரசு ரெம்டேசிவிர் ஊசி உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேவையை பூர்த்தி செய்வதற்காக இன்று 57 ஆலைகளில் இரவு பகலாக ரெம்டேசிவிர் ஊசி உற்பத்தி செய்யப்படுகிறது. கோவிட்-19 இரண்டாவது அலைக்கு முன் நம் நாட்டில் 20 ஆலைகள் மட்டுமே ரெம்டேசிவிர் ஊசிமருந்தை உற்பத்தி செய்து வந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.