கடந்த மாதம் தடுப்பூசி போட்ட 13 கோடி பேரில் நீங்களும் ஒருவர்… ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த மத்திய பா.ஜ.க. அமைச்சர்

 

கடந்த மாதம் தடுப்பூசி போட்ட 13 கோடி பேரில் நீங்களும் ஒருவர்… ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த மத்திய பா.ஜ.க. அமைச்சர்

மத்திய அரசின் தடுப்பூசி வழங்கல் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு, கடந்த மாதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட 13 கோடி பேரில் நீங்களும் ஒருவர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில், ஜூலை போய்விட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை என்று பதிவு செய்து இருந்தார். அதாவது மத்திய அரசின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தை குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த மாதம் தடுப்பூசி போட்ட 13 கோடி பேரில் நீங்களும் ஒருவர்… ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த மத்திய பா.ஜ.க. அமைச்சர்
மன்சுக் மாண்டவியா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடர்ச்சியான டிவிட்டுகளில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை மாதத்தில் 13 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது (தடுப்பூசி வழங்கல்) முடுக்கிவிடப் போகிறது. இந்த சாதனைக்காக நாம் நமது சுகாதார பணியாளர்களை பற்றி பெருமைப்படுகிறோம். இப்போது நீங்கள் அவர்களை (சுகாதார பணியாளர்கள்) பற்றியும், நாட்டையும் நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் தடுப்பூசி போட்ட 13 கோடி பேரில் நீங்களும் ஒருவர்… ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த மத்திய பா.ஜ.க. அமைச்சர்
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண் (கோப்புப்படம்)

ஜூலை மாதம் தடுப்பூசி போடப்பட்ட 13 கோடி பேரில் நீங்களும் ஒருவர் என்று கேள்விப்பட்டேன். ஆனால் நீ்ங்கள் நமது விஞ்ஞானிகளுக்கான நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தடுப்பூசி போடுமாறு பொதுமக்களிடம் முறையிடவில்லை. நீங்கள் தடுப்பூசி என்ற பெயரில் அற்ப அரசியல் செய்கிறீர்கள். உண்மையில் இது தடுப்பூசி அல்ல, உங்களுக்கு முதிர்ச்சி இல்லை என்று பதிவு செய்து இருந்தார்.