அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின் பேரில்தான் தாக்குதல்- காடுவெட்டி குருவின் மருமகன்

காடுவெட்டி குரு இறந்ததில் இருந்தே எங்களுக்கு அரசியல் கால் புரட்சி உள்ளது என்றும் அன்புமணி தூண்டுதலின் பேரில் தான் எங்கள் மீது தாக்குதல் காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் என்பவரும் நேற்றிரவு அரிவாளால் தாக்கப்பட்டனர். பலத்த வெட்டு காயங்களடைந்த மூவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, “காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ், காடுவெட்டி குரு இறந்ததில் இருந்தே எங்களுக்கு அரசியல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. நினைவு நாள் வந்தாலே பிரச்சனைதான். வீட்டிற்கு வந்த சென்ற நபரை சமாதி முன்பு அடித்திருக்கிறார்கள். அதனை கேட்க சென்ற எங்களையும் வெட்டியுள்ளனர். அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின்பேரில் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ரவி என்பவர் தான் காரணம். அன்புமணி, காமராஜ், சின்ன பிள்ளை, ரவி உள்ளிட்டோர் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம். நான் தடுக்கவில்லை என்றால் கொலை செய்திருப்பார்கள்” என தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொருளாளர் நூலகர் பாண்டுரங்கன் காலமானார்!

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொருளாளரும் மதுரை மாவட்ட முன்னாள் மைய நூலகருமான பாண்டுரங்கன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். மதுரை மைய நூலகத்தில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாண்டுரங்கள். இவர்...

புதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள்...

தேனி மாவட்டம் கம்பத்திலும் ஊரடங்கு… கடைகள் திறக்கத் தடை!

தேனி மாவட்டத்தில் கம்பம் நகரத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை, தேனி மாவட்டத்திலும் கடந்த மாதம் ஊரடங்கு...

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்த படியாகத் தமிழகம் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய...
Open

ttn

Close