கோடி கோடியாக வருமானம் ஈட்டிய மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சி

 

கோடி கோடியாக வருமானம் ஈட்டிய மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சி

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் இதுவரை 30 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோடி கோடியாக வருமானம் ஈட்டிய மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சி

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சி தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பப்படுகிறது.

இதுவரை 78 ‘மன் கி பாத்’ 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்நிகழ்ச்சியின் மூலம் 2014-15 ஆம் ஆண்டில் ரூ 1.16 கோடியும், 2015-16 ஆம் ஆண்டில் ரூ 2.81 கோடியும், 2016-17ல் ரூ 5.14 கோடியும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ 10.64 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டது. இது, 2018-19-ல் ரூ 7.47 கோடி வருமானத்தையும், 2019-20-ல் ரூ 2.56 கோடியையும், 2020-21ல் ரூ 1.02 கோடியும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. மொத்தம் 30. 80 கோடி ரூபாய் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.