சீனாவுடனான எல்லை பிரச்சினையை உறுதியாக சமாளிக்க தவறினால் நிலைமை மோசமாகும்.. மன்மோகன் சிங்

சீனாவுடனான எல்லை பிரச்சினையை உறுதியாக சமாளிக்க தவறினால் நிலைமை மோசமாகும்.. மன்மோகன் சிங்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மன்மோகன் சிங் பேசுகையில் கொரோனா வைரஸ், சீனாவுடனான மோதல் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

சீனாவுடனான எல்லை பிரச்சினையை உறுதியாக சமாளிக்க தவறினால் நிலைமை மோசமாகும்.. மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பேசியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுநோயை தைரியம், மிகப்பெரிய அளவு மற்றும் முயற்சிகள் மூலம் மத்திய அரசு சமாளிக்க தவறிவிட்டது. மற்றொரு உதாரணம் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, அதனை உறுதியாக சமாளிக்க தவறினால் மோசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். எல்லை விவகாரத்தில் சோனியாஜியின் கருத்தையும் ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனாவுடனான எல்லை பிரச்சினையை உறுதியாக சமாளிக்க தவறினால் நிலைமை மோசமாகும்.. மன்மோகன் சிங்

முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், இப்போது சீனாவுடான எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் முழு நெருக்கடி உள்ளது. ஆனால் முதிர்ச்சியடைந்த இராஜதந்திரமும், தீர்க்கமான தலைமையும் நமது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் என நாம நம்புகிறோம் என தெரிவித்தார்.