இந்த மூன்றை மட்டும் மோடி அரசு செய்தால் போதும்.. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.. மன்மோகன் சிங்

 

இந்த மூன்றை மட்டும் மோடி அரசு செய்தால் போதும்.. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.. மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் அண்மையில் செய்தி நிறுவனத்துடன் இ மெயில் வாயிலாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மன்மோகன் சிங் அந்த இமெயில் கூறியிருப்பதாவது: நாட்டில் பொருளாதார மந்தநிலை ஒரு மனிதாபிமான நெருக்கடி. லாக்டவுனை நடைமுறைப்படுத்திய அரசாங்கத்தின் அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு அணுகுமுறை மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை அந்த கட்டத்தில் லாக்டவுன் தவிர்க்க முடியாத தேர்வாக இருக்கலாம். ஆனால் அறிவிப்பின் திடீர் தன்மை மற்றும் லாக்டவுனின் கடுமை ஆகியவை சிந்தனையற்ற மற்றும் உணர்வற்றதாக இருந்தது.

இந்த மூன்றை மட்டும் மோடி அரசு செய்தால் போதும்.. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.. மன்மோகன் சிங்

இந்தியாவில் ஆழமான மற்றும் நீடித்த பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாது. அதேசமயம் 3 நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்தால் பொருளாதார இயல்பு நிலையை மீட்டெடுக்க முடியும். முதலாவது, மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் குறிப்பிடத்தக்க நேரடி பண உதவி வாயிலாக அவர்களுக்கு செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும். இரண்டாவதாக அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் கடன் உத்தரவாத திட்டங்கள் வாயிலாக வர்த்தகங்களுக்கு போதிய மூலதனம் கிடைப்பதை உருவாக்க வேண்டும். கடைசியாக நிறுவன சுயாட்சி மற்றும் நடவடிக்கைகள் வாயிலாக நிதி துறைகளை சரி செய்ய வேண்டும். இதனை மத்திய அரசு செயல்படுத்தினால் வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதார இயல்பை மீட்டெடுக்க முடியும்.

இந்த மூன்றை மட்டும் மோடி அரசு செய்தால் போதும்.. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.. மன்மோகன் சிங்
நேரடி பண பரிமாற்றத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் கடன் விகிதம் அதிகரிக்கும். ஆனால் கடன் வாங்கினால் உயிர்களையும்,எல்லைகளையும் காப்பாற்ற முடியும், வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கலாம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்றால் அது மதிப்புக்குரியது . நாம் கடன் வாங்க வெட்கப்படக்கூடாது. ஆனால் அந்த கடனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் விவேகத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.