ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீது விசாரணை.. அரசு எவ்வளவு கீழ்தரமாக செல்லும் என்பதற்கு உதாரணம்.. மனிஷ் திவாரி

ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீது விசாரணை.. அரசு எவ்வளவு கீழ்தரமாக செல்லும் என்பதற்கு உதாரணம்.. மனிஷ் திவாரி

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகம் கோடி கணக்கில் நன்கொடை கொடுத்த விவகாரம் அண்மையில் தெரியவந்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், ராஜீவ் காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளிலும் நிதி நடவடிக்கையில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீது விசாரணை.. அரசு எவ்வளவு கீழ்தரமாக செல்லும் என்பதற்கு உதாரணம்.. மனிஷ் திவாரி

இதனையடுத்து இந்த 3 அறக்கட்டளைகளிலும் நன்கொடை பெற்றது உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளில் வருமான வரி சட்டம், வெளிநாட்டு நிதியுதவி விதிகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் விதிமீறல்கள் நடந்துள்ளதா என விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அமைச்சக குழு அமைத்துள்ளது. அமலாக்கப்பிரிவின் சிறப்பு இயக்குனர் ஒருவர் அந்த அமைச்சக குழுவின் தலைவராக இருப்பார். மேலும் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகளில் அந்த குழுவில் இடம்பெறுவர்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை மீது விசாரணை.. அரசு எவ்வளவு கீழ்தரமாக செல்லும் என்பதற்கு உதாரணம்.. மனிஷ் திவாரி

அறக்கட்டளைகளின் நிதி நடவடிக்கைகளை விசாரணை செய்ய அமைச்சக குழு அமைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி இது தொடர்பாக டிவிட்டரில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் இதர அமைப்புகளுக்கு எதிரான சட்டவிரோத,தன்னிச்சையான மற்றும் தீயநோக்கம் உடைய நடவடிக்கை அரசு எந்த அளவுக்கு கீழ்தரமாக செல்லும் என்பதற்கு மற்றொரு உதாரணம். பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுப்பது, சீனா மற்றும் கோவிட்-19 ஆகியவற்று எதிராக போராடுவதை காட்டிலும் காங்கிரசுடன் சண்டை போட அரசு விரும்புகிறது என பதிவு செய்து இருந்தார்.