நல்ல கல்வி கொடுக்க முடியவில்லையா? பதவியிலிருந்து விலகுங்க.. யோகி ஆதித்யநாத்தை சாடிய ஆம் ஆத்மி

 

நல்ல கல்வி கொடுக்க முடியவில்லையா? பதவியிலிருந்து விலகுங்க.. யோகி ஆதித்யநாத்தை சாடிய ஆம் ஆத்மி

உத்தர பிரதேசத்தில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க முடியவில்லை என்றால் பதவியிலிருந்து விலகுங்க என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வலியுறுத்தியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன், 2022ல் நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று தெரிவித்தார். மேலும், டெல்லி பள்ளிகளுடன் ஒப்பிட்டு உத்தர பிரதேச பள்ளிகளின் தரத்தை விமர்சனம் செய்தார். இதற்கு, 1,024 பள்ளிகளின் (டெல்லி பள்ளிகளின் எண்ணிக்கை) நிலையை 1.59 லட்சம் பள்ளிகளுடன் ஒப்பிடும் நபரின் புத்திசாலித்தனத்துக்கு மட்டுமே நான் பரிதாபப்பட முடியும் என்று உத்தர பிரதேச தொடக்க கல்வித்துறை அமைச்சர் சதீஷ் திவேதி பதிலடி கொடுத்தார்.

நல்ல கல்வி கொடுக்க முடியவில்லையா? பதவியிலிருந்து விலகுங்க.. யோகி ஆதித்யநாத்தை சாடிய ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச தொடக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, டெல்லியின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் என்று தெரிவித்து இருந்தார். இதனையடுத்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, பள்ளி குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க முடியவில்லை என்றால் பதவியை விட்டு விலகுங்க என்று யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்தினார்.

நல்ல கல்வி கொடுக்க முடியவில்லையா? பதவியிலிருந்து விலகுங்க.. யோகி ஆதித்யநாத்தை சாடிய ஆம் ஆத்மி
மணிஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இது தொடர்பாக டிவிட்டரில், தற்போது சாக்கு சொல்வது வேலைக்கு ஆகாது யோகி ஆதித்யநாத்ஜி. அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தின் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல கல்வி கொடுக்க முடியாவிட்டால், அது உங்கள் இயலாமை. உத்தர பிரதேச மக்களின் தவறு என்ன? உங்களால் நிர்வகிக்க முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யுங்க. பெரிய மாநிலத்தின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கும் திறமையுள்ள நபரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.