• December
    05
    Thursday

Main Area

Main



கோப்பையை வென்ற கையுடன் பிரபல தமிழ் நடிகையை திருமணம் செய்த விளையாட்டு வீரர்! 

manish pandey with ashrita shetty
manish pandey with ashrita shetty

பெங்களூரைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனிஷ் பாண்டே, உதயம் என்.ஹெச். 4 என்ற தமிழ் படத்தில் நடித்த அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்துகொண்டார். 

இந்திய கிரிக்கெட் அணியில் நான்காவது இடத்திற்கு சரியாக இருப்பார் என களமிறக்கப்பட்ட மனிஷ் பாண்டே அடுத்தடுத்த தொடர்களில் தொடர்ந்து சொதப்பியதால் வாய்ப்புகளை நழுவ விட்டார். இதனை எடுத்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார் தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் ஆட இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 Ashrita Shetty

இதுவரை 23 ஒருநாள் போட்டி மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரும் அஷ்ரிதா ஷெட்டியும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரில் ஆடி முடித்து வந்த கையுடன் அஷ்ரிதாவை மனிஷ் பாண்டே திருமணம் செய்துகொண்டார். 

2018 TopTamilNews. All rights reserved.