ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக ஒலிம்பிக்ஸ் பார்க்கப்படுகிறது. எந்தவொரு நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே அவர்களின் லட்சியமாக இருக்கும். வெள்ளிப் பதக்கத்தையாவது நிச்சயம் பெற்றுவிட வேண்டும் என்றே சொல்வார்கள். அந்தளவிற்கு சர்வதேச அளவில் பிரபலமான தொடர். இந்தத் தொடர் இம்மாதம் ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

முதல் நாளில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவிற்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், வெள்ளிப் பதக்கம் வென்று ஆறுதல் அளித்தார் மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய் சானு. மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்காக கலந்துகொண்ட ஒரே வீராங்கனை மீரா பாய் தான். மொத்தம் 202 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இவருக்கும் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சி ஹூய்க்கும் 8 கிலோவே வித்தியாசம். அவர் 210 கிலோ தூக்கி முதலிடம் பிடித்திருந்தார்.

ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

மீரா பாய் பெற்றது வெள்ளிப் பதக்கம் தான் என்றாலும், பளுதூக்குதலில் இந்தியாவுக்கு அடுத்து ஒரு பதக்கம் கிடைக்க 21 வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதே அவரின் வெற்றிக்கான கொண்டாட்டம் அடங்கியிருக்கிறது. 2000ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் கர்னம் மல்லேஸ்வரி பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதற்குப் பிறகு மீரா பாய் தற்போது தான் இந்தியாவிற்கு பதக்கம் வாங்கி கொடுத்துள்ளார். ஒலிம்பிக்ஸில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் இவர்.

ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

இது மட்டுமில்லாமல் இந்தியாவின் பதக்க கணக்கை துவக்கி வைத்து, பதக்க பட்டியலில் 15 இடத்தில் இந்தியாவை அமர்த்தியிருக்கிறார். இந்தியா பெற்றிருக்கும் ஒரே பதக்கம் மீரா பாய் பெற்றுத்தந்தது. பல்வேறு சாதனைகளைப் புரிந்ததால் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். மீரா பாய் ரயில்நிலையங்களில் டிக்கெட் வசூலிக்கும் பணி செய்து கொண்டிருக்கிறார். இனி அதைவிட சிறந்த பணியை வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.