மீண்டும் லாக்டவுனை நீட்டிக்க தொடங்கிய மாநிலங்கள்… ஊரடங்கை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்த மணிப்பூர்

மீண்டும் லாக்டவுனை நீட்டிக்க தொடங்கிய மாநிலங்கள்… ஊரடங்கை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்த மணிப்பூர்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. கடந்த மாதம் முதல் லாக்டவுனில் சிறிது தளர்வுகளை ஏற்படுத்தியது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

மீண்டும் லாக்டவுனை நீட்டிக்க தொடங்கிய மாநிலங்கள்… ஊரடங்கை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்த மணிப்பூர்

இதனையடுத்து பல மாநிலங்கள் லாக்டவுனை நீட்டிக்க தொடங்கி விட்டன. அசாம் மாநில அரசு கம்ரூப் பெருநகர மாவட்டத்தில் கடுமையான லாக்டவுனே நேற்று முதல் ஜூலை 12ம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது. தற்போது மணிப்பூர் அரசும் லாக்டவுனை ஜூலை 15ம் தேதி வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது. ஜார்க்கண்ட் அரசும் லாக்டவுனை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மீண்டும் லாக்டவுனை நீட்டிக்க தொடங்கிய மாநிலங்கள்… ஊரடங்கை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்த மணிப்பூர்

மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங் இது குறித்து கூறுகையில், மணிப்பூரில் லாக்டவுனை மேலும் 15 நாட்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்கனவே சில மாவட்டங்களில் லாக்டவுன் அமலில் உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்துவது தொடர்பாக இன்று தமிழக அரசு முடிவு எடுக்க உள்ளது.