மணிப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா…. திகைப்பில் கட்சி தலைமை

 

மணிப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா…. திகைப்பில் கட்சி தலைமை

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேற்று முன்தினம் அம்மாநில சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பைரன் சிங் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று மணிப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் நசீர், ஒய்னம் லுகோய் சிங், பி ப்ரோஜென், நகம்தாங் ஹாக்கிப், ஜின்சுவான்ஹாவ் மற்றும் ஓக்ரம் ஹென்றி சிங் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மணிப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா…. திகைப்பில் கட்சி தலைமை

இது தொடர்பாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஹென்றி சிங் இது குறித்து கூறுகையில், கடந்த திங்கட்கிழமையன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருந்த போது, மதியம் 12.55 மணிக்கு சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங்கிடம் எங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினோம். நான் காங்கிரசில் பிறந்தது மற்றும் வளர்ந்திருந்தாலும், என் தொகுதி மக்களின் விருப்பப்படி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படுகிறேன் என தெரிவித்தார்.

மணிப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா…. திகைப்பில் கட்சி தலைமை

60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் காங்கிரசால் ஆட்சியமைக்க முடியவில்லை. அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி கண்டது இதுதான் தாங்கள் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய முக்கிய காரணம் என பதவியை ராஜினாமா செய்த மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நசீர் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவையும் மணிப்பூர் சபாநாயகர் நேற்று கொண்டார்.