மலேசிய கலைவிழா பணத்தில் கையாடல்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ரவிவர்மா நீக்கம்

 

மலேசிய கலைவிழா பணத்தில் கையாடல்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ரவிவர்மா நீக்கம்

சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மாவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக செயற்குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

மலேசிய கலைவிழா பணத்தில் கையாடல்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ரவிவர்மா நீக்கம்

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், ‘’சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரவிவர்மாவின் தவறான அணுகுமுறைகளினால் அந்த நிகழ்ச்சி சரியாக நடைபெறாமல் நினைத்தது நடக்காமல் போய்விட்டது.

மலேசிய கலைவிழா பணத்தில் கையாடல்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ரவிவர்மா நீக்கம்

ஆனால், ரவிவர்மாவுக்கு மட்டும் நினைத்தது நடந்துவிட்டது. அந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான பணத்தை கையாடல் செய்துவிட்டார். அவர் கையாடல் செய்ததற்காக ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இது தவிர, ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கொடுத்த கொரோனா நிவாரண நிதியிலும் கையாடல் செய்துவிட்டார் ரவிவர்மா. ஆகவே, அவரை சங்கத்தில் நீக்கம் செய்கிறோம்’’ என்றனர்.