நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பிரியாணி கொடுத்த உறவினர்கள்

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பிரியாணி கொடுத்த உறவினர்கள்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு அவரது உறவினர்கள் பிரியாணி கொடுக்கவந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பிரியாணி கொடுத்த உறவினர்கள்

நடிகை தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள் முன்பு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மணிகண்டனிடம் விசாரணை நடத்தவும், மணிகண்டனுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கவும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே போதுமான அளவு விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகவும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட 9வது குற்றவியல் நடுவர் மோகனாம்பாள் காவல் கொடுக்க மறுத்து போலீஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே காலை வழக்கு விசாரணை முடிந்து மாலை தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளையின் போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சாப்பிட பிரியாணி எடுத்து வந்து கொடுத்தனர். ஏற்கனவே, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் மணிகண்டன் இருக்கும் போது சொகுசு வசதிகளுடன் இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, மணிகண்டனுக்கு பிரியாணி வழங்குவதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தனர். தனியார் உணவகம் ஒன்றில் காவல்துறை சார்பில் உணவு வாங்கப்பட்டு மணிகண்டனுக்கு அளிக்கப்பட்டது.