“அரசியலில் வடிவேலு இல்லாத இடத்தை ராஜேந்திர பாலாஜி நிரப்பிவருகிறார்”

 

“அரசியலில் வடிவேலு இல்லாத இடத்தை ராஜேந்திர பாலாஜி நிரப்பிவருகிறார்”

ராஜபாளையம் அருகே ரெட்டியபட்டி தொம்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, “விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் சக்தி திட்டத்தின் டெண்டர் பணிகளை தமிழக அரசு முறைப்படி விடாமல், முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் விட்டதால் ஜல்சக்தி திட்டத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கொரோனா தடுப்பூசியை பொருத்தமட்டில் பாரதப் பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.

“அரசியலில் வடிவேலு இல்லாத இடத்தை ராஜேந்திர பாலாஜி நிரப்பிவருகிறார்”

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிதானமிழந்து பேசி வருகிறார். அரசியலில் வடிவேலு இல்லாத இடத்தை பெற்று வரும் அமைச்சருக்கு பாடம் புகட்டி ரிட்டயர்மென்ட் கொடுத்து சிவகாசி மக்கள் அவரை விரைவில் வீட்டில் அமர வைப்பார்கள். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவர். நடிகர் ரஜினிகாந்தை பொருத்தவரை பாஜக கட்சியினர் செய்த பிரச்சாரம் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்கள் பலரும் மதசார்பற்ற கூட்டணியை சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். கடந்த 96 தேர்தல் மற்றும் அடுத்த கட்டங்களில் ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் மத சார்பற்ற மக்களுடன் இணைந்து பயணித்துள்ளனர். அதன் விளைவாக ரஜினி மன்றத்தில் இருந்து விலகியவர்கள் மதசார்பற்ற கட்சியில் இணைகிறார்கள் என்ற செய்தி மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது” எனக் கூறினார்.