‘10,000 திரையுலக கலைஞர்களுக்கு உதவ’ உருவாகும் மணிரத்னத்தின் ‘நவரசா’!

 

‘10,000 திரையுலக கலைஞர்களுக்கு உதவ’ உருவாகும் மணிரத்னத்தின் ‘நவரசா’!

கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகமே முடங்கியது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்படாததால், திரையுலக கலைஞர்களின் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பலர் உதவிக் கரம் நீட்டினாலும், வறுமை நிலையில் இருந்து திரையுலக கலைஞர்களால் மீள முடியவில்லை. இத்தகைய சூழலில் தான், கடந்த அக்டோபர் இயக்குனர்கள் மணிரத்னமும் ஜெயேந்திர பஞ்சபகேசனும் இணைந்து தனித்துவமான ஒரு திட்டத்தை அறிவித்தனர்.

‘10,000 திரையுலக கலைஞர்களுக்கு உதவ’ உருவாகும் மணிரத்னத்தின் ‘நவரசா’!

அதாவது முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரையும் ஒன்றிணைத்து ஒன்பது திரைப்படங்கள் கொண்ட ஆந்தாலஜி கதையாக ‘நவரசா’ வை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தனர். திரையுலகில் தேவைப்படுவர்களுக்கு உதவி புரிய இதன் மூலம் பல கோடி ரூபாய் நிதி திரட்டப்படுவதாக அறிவித்தனர். இந்த புதிய முயற்சி குறித்து பேசிய இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன், ‘ஒற்றுமையின் பிரதிபலிப்பாகவே இந்த படம் உருவாகிறது. வரும் பிப். மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு இதன் பணிகள் நடைபெற விருக்கிறது. இதில் ஈட்டப்படும் பணம் 10,000 திரையுலக கலைஞர்களின் உதவி புரியும்’ என்று கூறியுள்ளனர்.

‘10,000 திரையுலக கலைஞர்களுக்கு உதவ’ உருவாகும் மணிரத்னத்தின் ‘நவரசா’!

மேலும், ‘பூமிகா டிரஸ்டுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த சிறு உதவியின் மூலம் மீண்டும் தொழில்துறை வலுவடையும் என நம்புகிறோம்’ என்றும் தெரிவித்துள்னர். ‘நவரசா’ என்னும் இந்த ஆந்தாலஜி படம் நெட்ஃபிளிக்ஸுடன் கை கோர்த்துள்ளது என்பது நினைவு கூறத்தக்கது.