வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை- சொத்துக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது

 

வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை- சொத்துக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது

சென்னை

மாங்காட்டில் சொத்து தகராறில் அக்காவை கொலை செய்துவிட்டு, நாடகம் ஆடிய தங்கையை கைதுசெய்த போலீசார், அவரது கணவரை தேடி வருகின்றனர். சென்னை மாங்காடு, சந்திரசேகர் நகர் பகுதியை சேர்ந்தவர் தெய்வானை(40). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தெய்வானை கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, அவரது தங்கை லட்சுமி மாங்காடு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை குறித்து வழக்குப்பதிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லட்சுமியின் மீது சந்தேகம் திரும்பியது. இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சொத்துக்காக தங்கையே, அக்காவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை- சொத்துக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது

மேலும், அவரிடம் நடைபெற்ற விசாரணையில், தெய்வானை, அவரது மகனை தங்கை லட்சுமியிடம் ஒப்படைத்துவிட்டு, துபாயில் வேலை செய்து வந்துள்ளார். இதற்காக மாந்தோறும் தங்கைக்கும், அவரது மகனுக்கும் பணம் அனுப்பி வந்துள்ளார். இந்த பணத்தில் லட்சுமி மற்றும் அவரது கணவர் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தெய்வானையின் மகன் உயிரிழந்துள்ளார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய தெய்வானையிடம், லட்சுமியின் கணவரான ரமேஷ்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தெய்வானை இருவரையும் வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளார். மேலும், தனது சொத்தில் பங்கு இல்லை என்று கூறிய தெய்வானை, ரமேஷின் பூர்வீக சொத்துக்களையும் தர விடாமல் தடுத்து வந்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை- சொத்துக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது

இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் லட்சுமி ஆகியோர் தெய்வானையை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று அதிகாலை வீட்டின் பின்பக்க சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் தெய்வானையின் வாயை லட்சுமி பொத்திக்கொள்ள, அவரை ரமேஷ் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. மேலும், கொலையை மறைப்பதற்காக நேற்று தன்னை, தெய்வானையின் தூண்டுதலின் பேரில் மரம்நபர்கள் தாக்கியதாக கூறி புகார் ஒன்றை அளித்திருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து லட்சுமியை கைதுசெய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேஷ் குமாரை தேடி வருகின்றனர்.