நடிகையும் எம்பியுமான சுமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

நடிகையும் எம்பியுமான சுமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

கன்னட திரையுலகில் பிரபல நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் அம்பரீஷ். தமிழ், இந்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 2018 இல் பெங்களூரில் மரணம் அடைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த அம்பரீஷ், மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இதையடுத்து அவரது மனைவி நடிகை சுமலதா பாஜக ஆதரவுடன் மண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார்.

நடிகையும் எம்பியுமான சுமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்நிலையில்  நடிகை சுமலதா தனது முகநூல் பக்கத்தில் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே குனிகல் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ எச்.டி. ரங்கநாத், முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஜனார்த்தனா பூஜாரி ஆகியோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.