மந்தனா அணி முதலில் பேட்டிங் – பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டி

 

மந்தனா அணி முதலில் பேட்டிங் – பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டி

பெண்கள் டி20 கிரிக்கெட் தொடரான WomensT20 -ன் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இந்தத் தொடரில் சூப்பர் நோவாஸ், டிரெயில் ப்ளேயர்ஸ், வெலாஸிட்டி ஆகிய மூன்று அணிகள் ஆடுகின்றன.

மந்தனா அணி முதலில் பேட்டிங் – பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டி

ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு இருமுறை மோதின. அப்படி மோதியபோது சுவாரஸ்யமான முடிவு கிடைத்தது. ஆம், மூன்று அணிகளும் இரு போட்டிகளில் ஆடி, தலா ஒரு போட்டியில் வென்று, தலா ஒரு போட்டியில் தோற்றது. அதனால், ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ் அணியும், டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியும் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

மிதாலி ராஜ் தலைமையிலான வெலாஸிட்டி இம்முறை ஃபைனலுக்கு வரும் எனப் பலரும் கணித்திருந்த நிலையில் அது ரன்ரேட் அடிப்படையில் தேர்வாக வில்லை.

மந்தனா அணி முதலில் பேட்டிங் – பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டி

சூப்பர் நோவாஸ் அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், டிரெயில் ப்ளேயர்ஸ் அணியின் கேப்டன் மந்தனா.

டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் கேப்டன் ஹர்மன் பிரீத் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். எனவே தற்போது மந்தனா அணி பேட்டிங் ஆடி வருகிறது.