‘சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு’: நடை சாத்தப்பட்டது!

 

‘சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு’: நடை சாத்தப்பட்டது!

ஆண்டுதோறும் சபரிமலை கோவிலில் மண்டல பூஜை வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பூஜைக்காக கடந்த மாதம் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 22ஆம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஆரவாரமாக கொண்டு வரப்பட்டது.

‘சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு’: நடை சாத்தப்பட்டது!

அந்த தங்க அங்கியை ஐயப்பனுக்கு செலுத்தி, மண்டல பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது. மண்டல பூஜைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பின்னர், வழக்கமாக நடத்தப்படும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று சாத்தப்பட்ட நடை மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிசம்பர் 30 முதல் ஜனவரி 19 வரை பூஜைகள் நடைபெற உள்ள டிசம்பர் 31 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.