`2 பாடங்களில் பெயில்; மொத்தம் 196 மார்க்!’- உயிரை மாய்த்துக் கொண்ட மணப்பாறை பிளஸ் 2 மாணவி

 

`2 பாடங்களில் பெயில்; மொத்தம் 196 மார்க்!’- உயிரை மாய்த்துக் கொண்ட மணப்பாறை பிளஸ் 2 மாணவி

மணப்பாறை அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

`2 பாடங்களில் பெயில்; மொத்தம் 196 மார்க்!’- உயிரை மாய்த்துக் கொண்ட மணப்பாறை பிளஸ் 2 மாணவி

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் எழுதினர். திருச்சி மாவட்டத்தில் 250 பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 822 மாணவர்களும் 17 ஆயிரத்து 226 மாணவி- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 29,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 95.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாநில அளவில் திருச்சி ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பழைய கோட்டையைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ரேணுகா. இவர் ஓந்தாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிக் காத்திருந்த நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அந்த பட்டியல் பள்ளியில் ஒட்டப்பட்டது. இதில் ரேணுகா 2 பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் 196 மதிப்பெண் பெற்றிருந்தார். இந்த தகவல் அறிந்ததும் மனமுடைந்த ரேணுகா, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வீட்டிலிருந்து புகை வருவதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது ரேணுகா கருகிய நிலையில் கிடந்துள்ளார்.

பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வையம் பட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வியுள்ளதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.