’வாரத்திற்கு ஒரு பெண்; இந்த வாரம் டபுள் ட்ரீட்’- குஷியாக காட்டுக்குள் போன மேனேஜரை துடிதுடிக்க வைத்த மதுரை பெண்கள்!

 

’வாரத்திற்கு ஒரு பெண்; இந்த வாரம் டபுள் ட்ரீட்’- குஷியாக காட்டுக்குள் போன மேனேஜரை துடிதுடிக்க வைத்த மதுரை பெண்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் இலங்கை பிரமுகருக்கு சொந்தமான ஜே.ஜே. மில் இயங்கி வருகிறது. அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இங்கு மேலாளராக இருந்து வந்தார்.

ஜே.ஜே. மில்லில் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் நிறைய பெண்கள் ஈரோட்டில் தங்கி இருந்து அங்கு வேலை பார்த்து வருகின்றனர்.

’வாரத்திற்கு ஒரு பெண்; இந்த வாரம் டபுள் ட்ரீட்’- குஷியாக காட்டுக்குள் போன மேனேஜரை துடிதுடிக்க வைத்த மதுரை பெண்கள்!

சேலை கட்டிய பெண்கள்தான் தனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடித்த பெண்களை சேலை கட்டி வரச்சொல்லி கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் சிவக்குமார். அவர் விரும்பத்தை நிறைவேற்றாத பெண்களை வேலையை விட்டு நிறுத்தியிருக்கிறார். இதனால் குடும்ப சூழ்நிலை கருதி பயந்துபோன பெண்கள் சிவக்குமாரின் விருப்பத்திற்கு சம்மதித்திருக்கிறார்கள். வாரம் ஒரு பெண் என்று கணக்கு வைத்து, அந்தப்பெண்ணுடன் ஒரு நாள் முழுவதும் வெளியே சுற்றி, அவர்களுடன் சில்மிசங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் சிவக்குமார்.
வழிக்கு வராத பெண்களை அவர்களின் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டி பணிய வைத்திருக்கிறார். இப்படி மதுரையை சேர்ந்த இளம்பெண்களிடமும் தனது வேலையை காட்ட, அப்பெண்கள் சிவக்குமாருக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

’வாரத்திற்கு ஒரு பெண்; இந்த வாரம் டபுள் ட்ரீட்’- குஷியாக காட்டுக்குள் போன மேனேஜரை துடிதுடிக்க வைத்த மதுரை பெண்கள்!

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த மதுரையைச் சேர்ந்த இளம்பெண்கள் இரண்டு பேர், பல்லடம் அடுத்த பச்சான்காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சிவக்குமாரை அழைத்திருக்கிறார்கள்.

வாரம் ஒரு பெண் தான். இந்த வாரம் டபுள் ட்ரீட்டா என்று ஆசையில் சென்ற சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரேயை அடித்திருக்கிறார்கள். இதில், நிலைகுலைந்துபோய் கீழே விழுந்த சிவக்குமாரை கட்டையால் அடித்து, காயங்களில் மிளகாய் பொடியை தூவி துடிக்கவிட்டிருக்கிறார்கள்.

பின்னர் அவர்களே அவசர போலீசுக்கும் தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

வேலை கொடுக்காத ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டதாக, அப்பெண்கள் மீது ஆட்கடத்தல் வழக்கு போட்டிருக்கிறார் சிவக்குமார். போலீசாரும் அவருக்கே ஆதரவாக செயல்படுவதால், மதுரை ஆட்சியரிடம் சென்று நிலைமையை இரு பெண்களும் எடுத்துச்சொல்லி முறையிட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தற்போது வெளியே வந்து பரபரப்பாக பேசப்படுவதால் பல்லடம் போலீசார் முறையாக வழக்கை விசாரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்.

  • கதிரவன்