• April
    07
    Tuesday

Main Area

Main



பூமியை தட்டை என நிரூபிக்க முயன்ற நபர் – கலிபோர்னியாவில் சுயமாக தயாரித்த ராக்கெட்டில் பலியான சோகம்: வீடியோ உள்ளே

Mike Hughes
Mike Hughes

லாஸ் ஏஞ்சல்ஸ்: பூமியை தட்டை என நிரூபிக்க முயற்சித்த நபர், தான் சுயமாக தயாரித்த ராக்கெட்டில் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கேல் ஹ்யூஜ். இவருக்கு வயது 64 ஆகும். பூமி உருண்டையானது அல்ல. அது தட்டையானது என்று நீண்ட காலமாகவே மைக்கேல் ஹ்யூஜ் கூறி வந்தார். அதனால் இவரை பலர் பைத்தியக்கார மைக் என்று கிண்டல் செய்து வந்தனர். பூமியை தட்டை என நிரூபிப்பதற்காக அவர் பல பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில், தான் சுயமாக தயாரித்த ராக்கெட் ஒன்றில் மைக்கேல் ஹ்யூஜ் விண்ணில் பறக்க முயற்சித்தார். ஆனால் ராக்கெட் புறப்படும்போதே அதன் பாராசூட் கிழிந்து கீழே விழுந்து விட்டது. இதனால் மைக்கேல் பயணித்த ராக்கெட் சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு சென்று அங்கிருந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கடைசி நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.