“அடப்பாவி !ஏன் ஆம்பள குழந்தை வெறிபிடிச்சி அலையறே? ” பிறந்த பெண் குழந்தையை கொன்ற கணவன் மீது புகாரளித்த மனைவி.

இன்னொரு ஆண் குழந்தை மோகத்தில், ஒரு தந்தை தனக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை கொன்ற சம்பவத்தால் அந்த தாய் நிலைகுலைந்துபோயுள்ளார் .
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள நாஸ்லோ கிராமத்தில் வசிக்கும் ஹரிஷ்குமாருக்கும் அவரது மனைவி மீனா தேவி (27) க்கும் ஒரு ஆண் குழந்தையும் ,ஒரு பெண் குழந்தையும் உள்ளது .இந்நிலையில் ஹரிஷுக்கு மீண்டும் இன்னொரு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதால் அவரின் மனைவி கர்ப்பமானார் .

Man killed newborn daughter as he wanted a son [Representative image]
பத்து மாதம் முடிந்து பிரசவ நேரம் வந்ததும் மனைவியை பிரசவத்துக்கு மருத்துவமனையில் சேர்த்தனர் ,அப்போது அவரின் மனைவி மீனா மறுபடியும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் .இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் ஹரிஷ் அந்த குழந்தையோடு அந்த பெண் பிரசவ வார்டிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் ,அந்த பிறந்த பெண் குழந்தையை கொலை செய்துள்ளார் .பிறகு சிறிது நேரம் கழித்து அவர் மட்டும் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்து விட்டு வந்துள்ளார் .
இதனால் குழந்தையை இழந்த ஏக்கத்திலிருந்த அந்த தாய், உடனே காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய கணவர் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவரின் கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

 

Most Popular

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா : 857 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 7 லட்சத்து 03 ஆயிரத்து 371 பேர் பலியாகி...

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும்...

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...