darbar
  • January
    20
    Monday

Main Area

Main



பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞர்! 

Boy
Boy

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பம் பகுதியை சேர்ந்த ஜெகன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனால் ஜெகனின் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதன்காரணமாக ஆத்திரமடைந்த ஜெகன், பேருந்தில் சென்ற அப்பெண்ணின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அருகிலிருந்த பொதுமக்கள் ஜெகனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து வாணியம்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

Marriage

இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலிஸார் ஜெகனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.