மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய மாமனார் முயற்சி !!

ஆந்திர மாநிலம் பாண்ட்ராவாடா கிராமத்தில் மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய மாமனார் முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன 20 வயது பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். ஆபாசமாகவும் பேசி உள்ளார். இந்த வேதனையை மாமியாரிடம் சொன்னபோது இந்த பிரச்சனையை பெரிதுபடுத்து வேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து கணவரிடம் அந்த பெண் தெரிவிக்க அவர் நம்பவில்லை என கூறப்படுகிறது.

representative  image

இந்நிலையில் மே 23 அன்று கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாமனார் சிலுமிஷம் செய்ய உடனே மருமகள் அதை செல்போனில் படம் பிடித்தார். மாமனார் மீதான குற்றத்தை நிரூபிக்க செல்போன் ஒன்றே ஆதாரம் என கருதிய மருமகள் மாமனார் அத்துமீறலை தனது செல்போனில் மறைமுகமாக வீடியோ எடுத்தார். பின்னர் அதை காவல்துறையிடம் காண்பித்து புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மாமனார் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இப்போது, இந்த வழக்கில் விசாரணையின் பின்னர், பாதிக்கப்பட்டவரின் மாமனார் மீது காவல்துறை 376 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. தன் மீது புகார் அளித்தவுடன் மாமனார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸ் தேடி வருகிறது.

Most Popular

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் : திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ...

நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது....

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான்,...

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் . டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும்...