• April
    07
    Tuesday

Main Area

Main



பெற்ற மகளை ரூ. 7லட்சத்திற்கு விற்ற தந்தை: 4 மாத கர்ப்பிணியாக மீட்கப்பட்ட கொடூரம்!

 கர்ப்பிணி
கர்ப்பிணி

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் 13 வயது  சிறுமி ஒருவரின் குடும்பத்திடம், கோபா ராம் மாலி என தெரிந்த இடைத்தரகர் ஒருவர் உங்கள் பெண்ணுக்குப் பெரிய இடத்தில் வரன் பார்த்துள்ளேன். அவர்கள் பெண்ணை காணவேண்டும் என்று கேட்கின்றனர் என்று கூறியுள்ளார்.

abuse

இதை நம்பிய குடும்பத்தினர் இடைத்தரகருடன் சிறுமி மற்றும் சிறுமியின் தந்தையையும் சிவானா என்ற பகுதிக்குக்  கடந்த ஜூன் 22-ம் தேதி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டிற்குத் திரும்பிய சிறுமியின் தந்தை சிறுமியை யாரோ கடத்தி விட்டதாகக் கூறியுள்ளார். இதனால் கடந்த ஜூன் 30 -ம் தேதி சிறுமியை காணவில்லை என்று கூறி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

abuse

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  ஜூலை மாதம்  முதல் வாரத்தில் சிறுமியை ரூ .7 லட்சத்திற்கு விற்றுவிட்டதாகக் கூறி சிறுமியின் தந்தை மற்றும்  மாலி, சன்வ்லா ராம் தஸ்பா ஆகியோரை  கைது செய்தனர்.

abuse

இந்நிலையில் சிறுமியை கடந்த 12ஆம் தேதி ஹைதராபாத்தில் மீட்ட பார்மர் போலீசார் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ள சிறுமியை நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள்  என்று தெரிகிறது. 


 

2018 TopTamilNews. All rights reserved.