சீட்டிங்கில் இது புதுசு கண்ணா புதுசு – யார் இந்த அமுல்?

சென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் மேன்பவர் ஏஜென்ஸியைச் சேர்ந்த அமுல் என்ற பெண் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அமுல், எதற்காக அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என்று புகார் கொடுத்த ஐடி நிறுவன ஊழியரான இன்ஜினீயர் அசோக் ராஜிடம் பேசினோம். “நான் ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியில் குடியிருந்து வருகிறேன். வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை பணியமர்த்த முடிவு செய்தேன். அதற்காக சுலேகா, ஜஸ்ட் டயல் ஆகியவற்றில் மேன்பவர் ஏஜென்ஸி குறித்த தகவல்களை பெற்றேன். அப்போது ரோஜா மேன் பவர் ஏஜென்ஸியின் நம்பரை என்னிடம் கொடுத்தார். அதில் அமுல் என்பவர் என்னிடம் போனில் பேசினார்.

பின்னர் அவர் நேரில் வீட்டுக்கு வந்தார். அவரிடம் வீட்டு வேலைகள் குறித்து விரிவாகக் கூறினேன். உடனே அவர் ஒரு பெண்ணை வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். 4500 ரூபாய் சம்பளம் எனக் கூறினார். அதற்கு ஓகே என்று கூறினேன். பின்னர் டெபாசிட் தொகையாக 4500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அமுல் கூறினார். உடனே ஆன் லைன் மூலம் அமுலுக்கு 4500 ரூபாய் அனுப்பி வைத்தேன். அதன்பிறகு நாளை முதல் உங்கள் வீட்டு வேலைக்கு ஆள் வருவாள் என்று கூறிவிட்டு சென்றாள். அதனால் வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்காக காத்திருந்தேன். ஆனால் அன்றைய தினம் யாரும் வரவில்லை. உடனே அமுலுக்கு போன் செய்து யாரும் வரவில்லை என்று தெரிவித்தேன். அதற்கு அமுல், வீட்டு வேலைக்கு வரும் பெண், கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பரிசோதனை முடிந்த பிறகு வேலைக்கு வருவாள் என்று தெரிவித்தார்.

இதையடுத்தும் யாரும் வீட்டு வேலைக்கு வரவில்லை. அதனால், மீண்டும் அமுலிடம் போனில் பேசினேன். அப்போது அவர் தன்னுடைய மகளை டெலிவரிக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். பிறகு போனில் பேசுகிறேன் என்று கூறினார். அதன்பிறகு அவர் எனக்கு போன் செய்யவில்லை. அதனால் நான் அவருக்கு 10 தடவைக்கு மேல் போன் செய்தேன். ஆனால் அவர் என்னுடைய செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டார். அதனால் அமுலிடம் பேச முடியவில்லை. திட்டம் போட்டு அமுல் என்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தேன். அதனால் அமுல் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால் புகாரை வாங்கவில்லை. அதனால்தான் அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் புகாரளித்தேன். உடனே துணை கமிஷனர் உத்தரவிட்ட பிறகே நீலாங்கரை போலீஸார் மனு ஏற்பு சான்றிதழைக் (சிஎஸ்ஆர்) கொடுத்தனர்.

இதற்கிடையில் வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புவதாகக் கூறி அமுல் ஏமாற்றியதாக செய்தி வெளியானதும் அமுல் தரப்பினர் என்னிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். புகாரை வாபஸ் வாங்கும்படி கூறினர். ஆனால் நான் புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டேன். என்னைப் போல வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புவதாகக் கூறி அமுல் சிலரை ஏமாற்றியதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன். அமுலிடம் விசாரித்தால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தெரியவரும்” என்றார்.

இந்தச் சூழலில் அமுலும் வழக்கறிஞர் பாலாஜியும் பேசும் ஆடியோ ஒன்று கிடைத்தது. அதில் பாலாஜியை போனில் தொடர்பு கொள்ளும் அமுல் சார் நான் அனுப்பிய ஆள் வேலைக்கு வரவில்லை. அதற்கு என்னால் என்ன செய்ய முடியும். நீங்கள் ஏன் என்னைப்பற்றி இப்படி செய்தியை வெளியிட்டீர்கள். உங்களின் கூகுள் பே நம்பரைச் சொல்லுங்கள் நான் 4500 ரூபாயை அனுப்பி விடுகிறேன் என்று கூறுகிறார். அதற்கு பாலாஜி, என்னைப் போல நீங்கள் நிறைய பேரை ஏமாற்றியுள்ளீர்கள். அந்தப் பணத்தையும் கொடுங்கள். அதைவிட நீங்களே காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டால் தண்டனை குறையும் என்கிறார். அதற்கு ஏன் இப்படி செய்தீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதன்பிறகு வழக்கை வாபஸ் பெறும் படி கூறுகிறார். இந்த ஆடியோ ஆதாரத்தையும் போலீஸிடம் அசோக்ராஜ் தரப்பு கொடுத்துள்ளது.

இதற்கிடையில் அசோக்ராஜை ஏமாற்றியதைப் போல கண்ணன் என்பவரும் அமுலால் பணத்தை இழந்துள்ளார். இவரிடமும் வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புவதாகக் கூறிய அமுல் பணத்தை வாங்கி விட்டு ஆளை அனுப்ப வில்லை என்று கண்ணன் தெரிவித்துள்ளார். அமுல் குறித்த செய்தி வெளியானதும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஓரணியில் திரள தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து வாட்ஸ்அப் குரூப் ஒன்றையும் தொடங்கி அதில் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் 3 ஆண்டுகளாக அமுல் நூதன முறையில் சீட்டிங் செய்து வருவதாகவும் குறைந்த தொகை என்பதால் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்துக்கு செல்லவில்லை. அதனால் அமுல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார். இதுபோன்ற மோசடியாக மேன்பவர் ஏஜென்ஸி நடத்துபவர்களின் தகவல்களை சம்பந்தப்பட்ட ஆன்லைன் வெப்சைட்கள் உடனடியாக தங்களின் தளத்திலிருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏமாறுவதை தடுக்க முடியும்.

இதுகுறித்து துணை கமிஷனர் விக்ரமனிடம் கேட்டதற்கு “அமுல் குறித்து அசோக்ராஜ் என்பவர் புகாரளித்துள்ளார். விசாரணைக்குப்பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். அமுல் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்” என்றார்.

சென்னையில் வீட்டு வேலைக்கு ஆள்களை தேடுபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீஸார்.

Most Popular

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...