பிரியாணி பார்சலில் போதை பொருள் -பிரபல உணவு டெலிவரி சீருடையில் நடக்கும் மோசடி

 

பிரியாணி பார்சலில் போதை பொருள் -பிரபல உணவு டெலிவரி சீருடையில் நடக்கும் மோசடி

பிரபல உணவு டெலிவரி நிறுவன சீருடையில் போதை பொருள் கடத்தல் நடப்பதை மும்பையில் போதை பொருள் தடுப்பு போலீசார் கண்டறிந்துள்ளனர் .
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஓஷிவாராவின் மெகா மால் அருகே பிரபல உணவு டெலிவரி நிறுவன சீருடை அணிந்து கொண்டு பலர் போதை பொருட்களை பிரபலமான நடிகர் நடிகைகளுக்கு வழங்குவதாக போதை பொருள் கடத்தல் போலீசுக்கு தகவல் கிடைத்தது .இதன் அடிப்படையில் செப்டம்பர் 24 ம் தேதி போதை பொருள் போலீசார் அந்த பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர் .அப்போது அங்கே பிரபல உணவு நிறுவன சீருடையணிந்த ஒருவர் ஒரு பார்சலை இன்னொருவருக்கு வழங்குவதை கணடறிந்தனர் .அவரை பிடித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.


பிடிபட்ட நபர் ஜோகேஸ்வரியில் வசிக்கும் 40 வயதான உஸ்மான் அன்வாலி ஷேக் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது .
அவர் இதுபோல பிரபல உணவு டெலிவரி சீருடையணிந்து கொண்டு மும்பை பகுதியில் உள்ள பல பிரபலமான புள்ளிகளுக்கு போதை பொருட்களை வழங்கியதாக கண்டறிந்த போலீசார், அவரிடம் நடத்திய சோதனையில் 5.50 லட்சம் மதிப்புள்ள 139 கிராம் மெபெட்ரோன் (எம்.டி) என்ற போதை பொருளை மீட்டுள்ளனர்.
மேலும் இவரைப்போல பலர் மும்பை பகுதியில் , பிரபலமான உணவு நிறுவன சீருடையில் இப்படி பல திரைத்துறை முக்கிய புள்ளிகளுக்கு போதை பொருளை வழங்கி வருவதாக அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதால் ,இனி பிரியாணி பார்சல்களை பிரித்து பார்த்துதான் அனுப்பவேண்டும் என்ற சூழ்நிலை வரும்போல் தெரிகிறது .

பிரியாணி பார்சலில் போதை பொருள் -பிரபல உணவு டெலிவரி சீருடையில் நடக்கும் மோசடி