darbar
  • January
    20
    Monday

Main Area

Main



ஆப்பிள் போன் ஆர்டர் பண்ணா.... ஆண்ட்ராய்டு போன்ல ஆப்பிள் ஸ்டிக்கர ஒட்டி கொடுக்குறது! ஃபிளிப்கார்ட்டின் அராஜகம்

Fake IPHONE
Fake IPHONE

ராஜானி காந்த் குஷ்வாஷ் என்பவர் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 11 ப்ரோ ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வந்துள்ளது. 

ஃபிளிப்கார்ட்டில் செல்போன் ஆர்டர் செய்தால் மாம்பழங்கள், கற்கள், செங்கற்கள், சோப்பு ஆகியவற்றை பார்சல் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது தொடர்கதையாகிவருகிறது. அந்த வகையில் தற்போது ஐபோன் கேட்ட இளைஞருக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வந்த கொடுமை அரங்கேறியுள்ளது. 

ஐபோன்

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான 26 வயதான ராஜானி காந்த், ஃபிளிப்கார்ட்டில், ரூ. 93 ஆயிரத்துக்கு ஐபோன் 11 ப்ரோவை  ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்து இணையத்தில் பணமும் செலுத்திவிட்டார். 2 நாட்களில் அவருக்கு ஃபிளிப்கார்டிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த ராஜானிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் ஐபோன் 11 ப்ரோவுக்கு பதிலாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மேல் ஐபோன் பேனல் ஒட்டப்பட்டிருந்தது. உடனே ராஜானி காந்த் ஃபிளிப்கார்ட்டை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஆர்டர் உடனடியாக மாற்றிக்கொள்ளப்படும் என விளக்கமளித்தது. ஆனால் சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் தற்போது வரை அவருக்கு மாற்று போன் கிடைக்கவில்லை. 

 

 

விற்பனையாளர்கள் மற்றும் மூன்றாம் தர நிறுவனங்கள், ஃபிளிப்கார்ட்டை சட்டவிரோதமாக விற்பனை தளமாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.