“ரெண்டு பொண்ணுங்களும் என்னை விரும்பறாங்களே” -ஒரு வாலிபர் எடுத்த துணிச்சலான முடிவு .

 

“ரெண்டு பொண்ணுங்களும் என்னை விரும்பறாங்களே” -ஒரு வாலிபர் எடுத்த துணிச்சலான முடிவு .


ஒரே வாலிபரை இரு பெண்கள் விரும்பியதால், அந்த வாலிபர் இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார்.

“ரெண்டு பொண்ணுங்களும் என்னை விரும்பறாங்களே” -ஒரு வாலிபர் எடுத்த துணிச்சலான முடிவு .


சத்தீஸ்கரில் உள்ள ஒரு பஸ்தார் கிராமத்தில் ஹசீனா மற்றும் சுந்தரி என்ற இரு
பெண்களும் சந்து மவுரியா என்ற வாலிபரை விரும்பினர்.இதில் ஹசீனாவுக்கு 19 வயது, சுந்தாரிக்கு 21 வயது ஆகும் .இந்த இரு பெண்களும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்கள் இருவருமே ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே அதே ஊரை சேர்ந்த மவுரியாவை விரும்பினார்கள் .அதனால் இருவருக்குள்ளும் அவரை கல்யாணம் கட்டிக்க போட்டி நிலவியது .ஆனால் மவுர்யா அந்த இரு பெண்களையுமே விரும்பினார் .அதனால் ஒரு நாள் அந்த இரு பெண்களையும் கூப்பிட்டு பேசினார் .அப்போது அவர்களிடம் தான் இருவரையும் ஒரே மேடையில் ஊரார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார் .அதை கேட்டு முதலில் அவர்கள் அதிர்ச்சியடைந்தாலும்,பிறகு இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டார்கள் .அதில் ஒரு பெண்ணின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை .ஆனால் இன்னொரு பெண்ணின் பெற்றோர்கள் அந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள் .
அவர்களின் சம்மதத்தோடு ஜனவரி 3ம் தேதி அவர்களின் திருமணம் பஸ்தாரின் டிக்காரா லோஹங்கா கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவானது .அதன்படி ஊரார் அனைவரும் அந்த மண்டபத்தில் ஜனவரி 3 ம் தேதி ஒன்று கூடினார்கள் .அதன் பிறகு இரண்டு பெண்களுக்கும் அந்த மணமகன் மௌர்யா ஒரே நேரத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார் .அப்போது ஒரு மணமகளின் பெற்றோர் இந்த கல்யாணத்திற்கு வரவில்லை .ஆனால் இன்னொரு பெண்ணின் பெற்றோர் வந்தார்கள் .இந்த வகையான திருமணம் இந்து திருமணச் சட்டத்தின் படி ஒரு குற்றமாக கருதப்பட்டாலும் , இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

“ரெண்டு பொண்ணுங்களும் என்னை விரும்பறாங்களே” -ஒரு வாலிபர் எடுத்த துணிச்சலான முடிவு .