மக்களே உஷார்! சிம் கார்டு கஸ்டமர் கேர் அதிகாரி போல் பேசி 9.5 லட்சம் ரூபாயை ஆட்டையைப் போட்ட நபர்கள்!

 

மக்களே உஷார்! சிம் கார்டு கஸ்டமர் கேர் அதிகாரி போல் பேசி 9.5 லட்சம் ரூபாயை ஆட்டையைப் போட்ட நபர்கள்!

உத்தரபிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 3ஜி சிம்கார்டை 4ஜியாக மாற்றித் தருவதாக பேசிய மர்மநபர் அவர் வங்கிக் கணக்கில் இருந்து 9.5 லட்சம் ரூபாயை திருடியுள்ளார். இந்த ஆன்லைன் ஏமாற்றுப் பேர் வழிகளிடம் சிக்கியவர் வர்ஷா அகர்வால். நொய்டாவில் வசிக்கும் இவர் ஒரு போலி வாடிக்கையாளர் சேவை நிர்வாகியால் ரூ.9.52 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளார்.

மே 7 அன்று, ஒரு மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியாக தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரிடமிருந்து அகர்வாலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பின் போது, அந்த நபர் அகர்வாலிடம் அவர் வைத்திருக்கும் 3ஜி சிம் கார்டு விரைவில் வேலை செய்வதை நிறுத்தப்போவதாகக் கூறினார்.

மக்களே உஷார்! சிம் கார்டு கஸ்டமர் கேர் அதிகாரி போல் பேசி 9.5 லட்சம் ரூபாயை ஆட்டையைப் போட்ட நபர்கள்!

அவருடைய சிம் கார்டை தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் 3 ஜி முதல் 4 ஜி வரை மேம்படுத்த வேண்டும் என்று அழைப்பாளர் கூறியுள்ளார். அழைப்பாளரின் நோக்கங்களை அறியாத அகர்வால் தனது சிம் மேம்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டார். இதனால் அவர் கேட்ட விவரங்களை தந்துள்ளார். பின்னர் 72 மணி நேரத்தில் 4ஜியாக மாறிவிடும் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். சிம் கார்டு ஆறு நாட்களுக்குப் பிறகும் மேம்படுத்தப்படாதபோது அந்த பெண்ணுக்கு சந்தேகம் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, தனது வங்கிக்குச் சென்று தனது சேமிப்புக் கணக்கை சோதனைசெய்தபோது மே 8 முதல் 11 வரை 22 பரிவர்த்தனைகள் மூலம் ஒரு கணக்கிற்கு மொத்தம் ரூ.9.52 லட்சம் மாற்றப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நொய்டாவில் சைபர் செல் பொறுப்பாளரான பால்ஜீத் சிங் கூறுகையில் பணம் திருடிய குற்றவாளிகளை விரைவில் அவர்களை கைது செய்வோம்.” என கூறினார்.