திருமண இணையதளம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.5.6 லட்சம் மோசடி !!

 

திருமண இணையதளம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.5.6 லட்சம் மோசடி !!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமண இணையதளத்தில் அறிமுகமான ஆண் ஒருவர் ரூ.5.6 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பெண் ஒருவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.
தன்னை இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் என மேட்ரிமோனியல் இணையதளத்தில் அறிமுகம் செய்து கொண்ட இந்தியர் ஒருவர் தான் வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டிருப்பதாக விளம்பரம் தந்துள்ளார்.
சினிமாவில் வருவது போலவே ஒரு பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக இந்த விளம்பரத்தை பதிவிட்டுள்ளார்.

திருமண இணையதளம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.5.6 லட்சம் மோசடி !!
மே 20 அன்று, பெங்களூரைச் சேர்ந்த 46 வயதான ஒரு பெண், இரண்டு நபர்களுக்கு எதிராக ரூ.5.6 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகார்தாரர் ஜெயநகர் பகுதியில் வசிப்பவர். 2019 ஆம் ஆண்டில் தனக்கென ஒரு துணையை தேர்ந்தெடுக்க ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தில் தன்னுடைய விவரங்களை பதிவிட்டுள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்து ஆகஸ்ட் 2019 அன்று தன்னை ரியான்ஷ் தினேஷ் ஆச்சார்யா என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு நபர் அந்த பெண்ணிடம் அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் இருவரும் தொலைபேசியில் பேசி வந்தனர்.
தான் இங்கிலாந்தை சேர்ந்தவன் என்றும், தன்னுடைய தந்தை மலேசிய நிறுவனத்தில் பணியாளராக பணிபுரிந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் கூறி உள்ளார். மேலும் தந்தை முதலாளியிடம் பெரும் தொகையை விட்டுவிட்டார் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தந்தை இழந்த பணத்தை பெற சில நடைமுறைகள் இருப்பதாகவும் அதற்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபருக்கு ரூ.5.6 லட்சத்தை அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் மே 6 ஆம் தேதி, தன்னை சுங்க அதிகாரி அர்ச்சனா என்று அறிமுகம் செய்து கொண்டு தொலைபேசியில் பேசிய பெண் மலேசியா பணத்தை பெற 74000 ரூபாய் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) பிரிவு 420 பதிவு செய்யப்பட்டுள்ளது.