“ரம்மி விளையாடி டம்மி ஆனேன் ” -ஆன்லைன் சீட்டுக்கட்டில் 30 லட்சம் இழந்த வாலிபர் பண்ண வேலை

“ரம்மி விளையாடி டம்மி ஆனேன் ” -ஆன்லைன் சீட்டுக்கட்டில் 30 லட்சம் இழந்த வாலிபர் பண்ண வேலை

ஆன் லைன் ரம்மி விளையாட்டில் 30 லட்ச ரூபாய் இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல ஆன்லைன் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் .

“ரம்மி விளையாடி டம்மி ஆனேன் ” -ஆன்லைன் சீட்டுக்கட்டில் 30 லட்சம் இழந்த வாலிபர் பண்ண வேலை

புதுச்சேரி மாநிலத்தில் விஜயகுமார் என்ற 35 வயது வாலிபர் திருமணமாகி சொந்தமாக தொழில் செய்து வருகிறார் .இந்நிலையில் அவர் இந்த ஊரடங்கு நேரத்தில் போர் அடித்ததால் ஆன்லைனில் வந்த ரம்மி விளையாட்டின் விளம்பரத்தை பார்த்து அதை விளையாட ஆரம்பித்தார் .
ஆரம்பத்தில் எப்போதாவது விளையாடிய அவர் பிறகு நாளாக நாளாக அந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார் .முதலில் ஆயிரம் இரண்டாயிரம் வைத்து விளையாடி சில நேரம் தோற்றும் ,சில நேரம் ஜெயித்தும் வந்தார் .அந்த ஆன் லைன் விளையாட்டின் நோக்கமே வாடிக்கையாளர்களுக்கு முதலில் ஆசை காமித்து மோசம் செய்வதுதான் .இது தெரியாமல் ஆரம்பத்தில் சில ஆயிரங்கள் அந்த விளையாட்டில் வெற்றி பெற்ற அவர் பிறகு அதற்கு அடிமையானார் .
அதன் பிறகு அவர் லட்சக்கணக்கில் தோற்க ஆரம்பித்தார் .பிறகு நிறைய கடன் வாங்கி அந்த விளையாட்டில் தோற்க ஆரம்பித்தார் .மொத்தமாக அவர் 30 லட்ச ரூபாய் அந்த ஆன்லைன் ரம்மியில் தோற்று போனதும் அவருக்கு பயம் ஏற்பட்டது .

இதனால் கடன் காரர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தார் .அதனால் தன்னுடைய மனைவிக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பினார் ,அதில் அவர் ஆன் லைனில் ரம்மி விளையாடி 30 லட்ச ரூபாய் கடன் காரனாகிவிட்டதால் ,யாரும் அந்த விளையாட்டை விளையாடாதீர்கள் என்று கூறியுள்ளார் .பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்

“ரம்மி விளையாடி டம்மி ஆனேன் ” -ஆன்லைன் சீட்டுக்கட்டில் 30 லட்சம் இழந்த வாலிபர் பண்ண வேலை