“அடப்பாவி வெறும் பாடிய மட்டும் விட்டுட்டு ஓடி போயிட்டியே” -வாடகை காரில் நடந்த நூதன மோசடி

 

“அடப்பாவி வெறும் பாடிய மட்டும் விட்டுட்டு ஓடி போயிட்டியே” -வாடகை காரில் நடந்த நூதன மோசடி

அகமதாபாத்தின் சுரேந்திரநகரில் வசிகும் ஒரு நபர் ஒரு ட்ராவல்ஸில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து, அதிலிருந்த இயந்திரம் மற்றும் பிற உதிரி பாகங்களை கழட்டிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சுரேந்திரநகரத்தைச் சேர்ந்த ஆனந்த் படேல் செப்டம்பர் 27 ஆம் தேதி ஒரு ட்ராவல்ஸில் போலோ காரை வாடகைக்கு எடுத்தார். அவர் அந்த காரை செப்டம்பர் 30 க்குள் திருப்பித் தந்து விடுவதாக கூறினார் . பின்னர் காலக்கெடுவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், படேல் அந்த வாடகை கார் நிறுவனத்தை அழைத்தார்.அப்போது அவர் அந்த நிறுவன மேலாளரிடம் தங்களின் கார் விபத்தில் சிக்கியதாகக் கூறினார் .மேலும் அது சிக்கியுள்ள சரியான இடம் பற்றியும் தனக்குத் தெரியாது என்று கூறினார். அதை கேட்டு அதிர்ந்த நிறுவனம் வாகனத்தின் புகைப்படங்களை அனுப்பகேட்டபோது ,அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இதனால் அந்த நிறுவனம் ஜி.பி.எஸ் மூலம் அந்த காரை கண்காணித்த போது அது கொண்டல் அருகே அனாதையாக நிற்பதை கண்டனர்.உடனே அந்த கார் இருக்கும் இடத்திற்கு அவர்கள் விரைந்து சென்றனர்
அப்போது அந்த காரில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள முன் பம்பர், என்ஜின், மியூசிக் சிஸ்டம், சைட் மிரர்கள் மற்றும் பின்புற இருக்கை ஆகியவை திருடப்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். அதன்பின்னர் அந்த கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .பிறகு அவர்கள் அங்குள்ள காவல்நிலையத்தில் அந்த நபர் மீது புகாரளிதரர்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

“அடப்பாவி வெறும் பாடிய மட்டும் விட்டுட்டு ஓடி போயிட்டியே” -வாடகை காரில் நடந்த நூதன மோசடி